search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் உத்தரவு"

    • வளர்ச்சி திட்ட பணிகளையும் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • ரூ.41.88 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது.

    கோவை,

    கோவை மாவட்டம், பெரியநாயக்க ன்பாளையம் மற்றும் ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறையின் மூலம் நடைபெற்று வரும் மேம்பாலப் பணியினையும் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் ஆண்டு திட்டத்தின் கீழ் பெரியநாய க்கன்பாளையம் சந்திப்பு வழியாக மேம்பாலம் ரூ.115.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றது. இந்த பாலம் 1,850 மீ நீளத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது.

    தேசிய நெடுஞ்சாலை எண் 67-ல் கட்டப்படும் நான்கு வழி மேம்பாலம் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆரம்பித்து எல்.எம்.டபியூ. சந்திப்பு, பெரியநாயக்க ன்பாளையம் சந்திப்பு, வண்ணான்கோவில் சந்திப்பில் முடிகிறது. இந்த பாலத்தினால் 3 சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். கோவை - மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும். பாலத்தின் 84 சதவீதம் பணிகள் முடிவுற்று உள்ளன.

    மேலும், ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பகுதியில் மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் ரூ.41.88 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது. தேசிய நெடுஞ்சாலை எண் .67 ல் கட்டப்படும் நான்கு வழி மேம்பாலம் ஜான் பாஸ்கோ சர்ச்சில் ஆரம்பித்து ஜி.என்.மில்ஸ் சந்திப்பு, கோவை வெள்ளக்கிணறு பிரிவில் முடிவடைகிறது. இந்த பாலத்தினால் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் ஜி.என்.மில்ஸ் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, வாகனங்கள் எளிதாக செல்ல முடியும். பாலத்தின் 75 சதவீதம் பணிகள் முடிவுற்று உள்ளன.

    பெரியநாய க்கன்பாளையம் பாலம், ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பாலம் ஆகிய பாலங்களின் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதனை தொடர்ந்து நம்பர் 4 வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியர்களின் கல்வி கற்றல் திறன் குறித்து பார்வையிட்டார்.

    மேலும், வளம் மீட்பு பூங்காவில் வேளாண் சார்ந்த கழிவு பொருட்கள் தரம் பிரிக்கும் பணியினையும், நாயக்கன்பாளையத்தில் தனியார் தோட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் வரப்பு அமைக்கும் பணியும் மற்றும் நாயக்கன் பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் பெரியநா யக்கன்பாளையம் டவுன் கூட்டுறவு நுகர் பொருள் அங்காடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். குச்சி பாளையத்தில் கரிசல் மகளிர் அங்கக வேளாண் குழுவினர் அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், பஞ்சகாவ்யம், மீன் அமிலம் உள்ளிட்ட இயற்கை உரங்களை தானாகவே தயாரித்து வருகின்றனர்.

    இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கும் விதமாக மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை இடுபொருள் உற்பத்தி மையம் அமைக்க ரூ.1 லட்சம் வழங்கப்படுகின்றது. மேலும் இப்பகுதியிலுள்ள பயிரிட்டுள்ள தென்னை, பாக்கு, வாழை, வெண்டை, கத்திரி, தக்காளி, முள்ளங்கி, மிளகாய் உள்ளிட்ட சாகுபடிகளை பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலை, கோட்டப்பொறியாளர் ரமேஷ், உதவி கோட்டப்பொறியாளர் முரளிகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) எம்.சபி அகமது உள்பட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உடனிருந்தனர்.

    • விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள் பதில் அளித்தனர்.
    • தேவையில்லாத சான்றுகளைக் கேட்டு அவர்களை அலைக்கழிக்க கூடாது என்றார்.

    தருமபுரி,

    தருமபுரி கலெக்டர் சாந்தி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள் பதில் அளித்தனர்.

    தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் பேராசிரியர் சின்னசாமி பேசும்போது கடந்த நான்கு நாட்களாக பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட சோமனஅள்ளி கிராமத்தில் யானை முகாமிட்டு நெல், கரும்பு, காய்கறிகள் மற்றும் விலை நிலங்களில் விவசாய பயன்பாட்டுக்காக நிறுவப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை சேதப்படுத்தி வருவதாகவும் உடனடியாக யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்றும், யானைகளால் சேதமான பகுதிகளுக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    கலெக்டர் சாந்தி வனத்துறை அலுவலரை அழைத்து உடனடியாக யானைகளை பிடித்து வனப்பகுதியில் விட அறிவுறுத்தினார். இதுகுறித்து பேசிய வனத்துறை அதிகாரிகள் யானைகளை விரட்டும் பணியில் 15-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் மயக்க ஊசி செலுத்தி இரண்டு யானைகளை பிடித்து காட்டுப் பகுதியில் விட சென்னையில் அனுமதி பெற்றுள்ளதாகவும், அடுத்த வாரத்திற்குள் யானைகளைப் பிடித்து வனத்துக்குள் விடுவதற்கான பணிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

    இதன் மூலம் கடந்த ஒரு மாதமாக பென்னாகரம் மற்றும் பாலக்கோடுகளில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளின் அட்டகாசம் நிறைவுக்கு வரவுள்ளது. சோலை கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயி தனது மின் இணைப்பு வேறு ஒருவர் நபரின் பெயரில் உள்ளதாகவும், கடந்த இரண்டு வருடங்களாக அலைக்கழிக்கப்பட்டு வருவதாகவும் வலியுறுத்தினார்.

    கலெக்டர் சாந்தி பேசும் போது விவசாயிகளை அலைக்கழிக்காமல் உரிய ஆவணங்களை சரி பார்த்து மின் இணைப்பு பெயர் மாற்றி வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையில்லாத சான்றுகளைக் கேட்டு அவர்களை அலைக்கழிக்க கூடாது என்றார்.

    தருமபுரி மாவட்டத்தில் முதல்முறையாக விவசாயிகளிடமிருந்து கேழ்வரகு கொள்முதல் செய்வதற்கு விவசாயிகள் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

    • மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது.
    • விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் சாந்தி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தருமபுரி,-

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்களை அதிகளவு சேகரித்து பயோடீசலாக மாற்ற அறிவுறுத்தப்பட்டது. தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகள் உபயோகம், பான்மசாலா குட்கா விற்பனை மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை ஆகியவற்றுக்கு உடனடி அபராதம் விதிக்குமாறு அறிவுறுத்தினார்.

    தருமபுரி மாவட்டத்தில் அனைத்து ஐஸ் தயாரிக்கும் கம்பெனிகளும் ஆய்வு செய்யப்பட்டு உரிமம் வழங்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் அசைவ உணவு தயாரிக்கும் அனைத்து உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் அயோடின் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் சாந்தி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா, காரிமங்கலம்- பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • மறுவாழ்வு இல்லத்தில் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு அறிவுரை
    • பொதுமக்கள் பாராட்டு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தபேல்தார் முத்துசாமி தெருவில் பல ஆண்டுக ளாக மனநலம் பாதிக்கப்பட்ட குண்டுபாய் என்ற பெண் உள்ளார். இவர் கடந்த ஒரு மாதமாக பஸ்நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் அங்கும், இங்கும் சுற்றி திரிந்து வந்தார்.

    இதனை கலெக்டர் அமர்குஷ்வாஹா அலு வலகத்திற்கு வரும்போதெல்லாம் பார்த்துள்ளார். அதைத் தொடர்ந்து நேற்று அந்தப்பெண்ணை மீட்டு மனநலம் பாதிக் கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி நேற்று பஸ்நி லைய பகுதியில் சுற்றிதிரிந்த அந்தப்பெண்ணை மீட்டு கலெக் டர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு கலெக்டர் முன்னிலையில் உதவும் உள்ளங்கள் மனநலம் பாதிக்கப்பட்ட வர்களுக்கான மறுவாழ்வு இல்ல நிர்வாகி ரமேஷிடம் ஒப்ப டைத்து, அந்தப்பெண்ணுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க உத்தர விட்டார்.

    அப்போது கிராம நிர்வாக அலுவலர் ஜெயசூர்யா மற்றும் உதவும் உள்ளங்கள் சமூகப் பணியாளர்கள் உடன் இருந்தனர். கலெக்டரின் மனிதநேயத்தை பொதுமக்கள் பாராட்டினர்.

    • எக்ககுடி ஊராட்சியில் வரத்து கால்வாய்களை சீரமைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
    • ஊராட்சிகள் தூய்மையாக இருப்பதற்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம், எக்ககுடி ஊராட்சியில் பாசன கண்மாயை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது எக்ககுடி ஊராட்சி பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பாசன கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வரக்கூடிய கால்வாய் சேதமடைந்தும், ஆக்கிரமிப்பு களாலும் தண்ணீர் வராமல் விளை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து பாசன கண்மாயை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் புதுக்குளம், கொத்தங்குளம் பாசன கண்வாய்களுக்கு எட்டிவயல் கால்வாய் மற்றும் ரகுநாதபுரம் கால்வாய் வழியாக வைகை ஆற்றில் இருந்து இந்த பகுதிகளுக்கு பாசன பயன்பாட்டிற்கு தண்ணீர் வந்தது. தற்போது 2 கால்வாய்களும் ஆக்கிர மிப்புகள் மற்றும் சீரமைப்பு பணிகள் இல்லாமல் இருந்து வரும் நிலையை பார்வை யிட்டதுடன் உடனடியாக பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒருங்கி ணைந்து கள ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    பின்னர் கொத்தங்குளம், எக்ககுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு சென்று மாணவ, மாணவி களிடம் கல்வி திறன் குறித்து ஆய்வு செய்தார். பள்ளியில் சுகாதார வளாகம் தூய்மையாக உள்ளதா? என பார்வையிட்டார்.

    தூய்மை பணியா ளர்களிடம் குழந்தைகள் பயன்பாட்டிற்குள்ள சுகாதார வளாகங்கள் தூய்மையாக இருக்கும் வகையில் தினமும் நன்றாக பராமரிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.தொடர்ந்து எட்டிவயல் பெரிய கண்மாயின் கழுங்கு பகுதிகளை பார்வையிட்டு அங்கிருந்து தண்ணீர் செல்லும் கால்வாய் பகுதிகளை சீரமைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். எட்டிவயல் ஊராட்சியில் உள்ள கிளை நூலகத்தை பார்வையிட்டு அதிகளவு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தேவையான புத்தகங்கள் இருப்பு வைக்க வேண்டும்.

    ஊராட்சிகளில் நாள்தோறும் சேரிக்கக் கூடிய குப்பைகளை திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் தரம் பிரித்து அதற்கேற்ப பணிகளை மேற்கொள்ள வேண்டும். மற்ற ஊராட்சிகளில் ஆய்வின்போது திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் செயல்படாமல் இருப்பது கண்டறிந்தால் அந்த ஊராட்சியில் அபராதம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே ஊராட்சிகள் தூய்மையாக இருப்பதற்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ராமர், கீழக்கரை வட்டாட்சியர் சரவணன் மற்றும் விவ சாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகிற அக்டோபர் 2-ந் தேதி, காந்திஜெயந்தி மற்றும் 9-ந் தேதி மூடப்பட வேண்டும்.
    • மிலாடி நபி அன்றும் டாஸ்மாக் கடைகள், மதுபானக்கூடங்கள், அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கலெக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகிற அக்டோபர் 2-ந் தேதி (ஞாயிற்று கிழமை), காந்திஜெயந்தி மற்றும் 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிலாடி நபி அன்றும் டாஸ்மாக் கடைகள், மதுபானக்கூடங்கள், அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
    • மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் உத்தரவிட்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

    பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்த 274 மனுக்கள் பெற்றார். மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் இருந்து பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும்.

    தீர்வு வழங்க முடியாத மனுக்கள் குறித்து மனு தாரர்களிடம் உரிய காரணம் குறித்து எடுத்துரைக்க வேண்டும். அப்போது தான் அது போன்ற மனுக்கள் திரும்பத் திரும்ப வராது. எனவே பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த பாண்டிய ராஜன் வாரிசுதாரரான அவரது மனைவி பாண்டி மீனாவிற்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.50 ஆயிரத்துக்கான காசோ லையை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    • அனைத்து வீடுகள், கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலகங் களிலும் இன்று முதல் 15-ஆம் தேதி வரை தேசிய கொடியை ஏற்றி வைத்திட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
    • ஊராட்சிமன்ற தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    தேனி:

    மத்திய, மாநில அரசுகள் இந்தியாவின் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள், கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களிலும் இன்று முதல் 15-ஆம் தேதி வரை தேசிய கொடியை ஏற்றி வைத்திட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் சுதந்திர தினத்தன்று தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி, அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் அனைத்து ஊராட்சிமன்ற அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு பதிலாக வேறு எவரேனும் தேசிய கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஊராட்சிகளில் தேசிய கொடியை ஏற்றுவது தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால் உதவி இயக்குநரிடம் (ஊராட்சிகள்), புகார் தெரிவிக்கலாம். தேசிய கொடியை அவமதிப்பு செய்யும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் முரளிதரன் எச்சரித்துள்ளார்.

    • கடலூரில் மக்கள் குறைகேட்பு கூட்டதில் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    • உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடி–யாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம், தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர். மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பட்டா தொடர்பான 58 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 196 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 13 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 12 மனுக்களும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம் தொடர்பாக 38 மனுக்களும், தையல் எந்திரம் கோரி 48 மனுக்களும், இதர மனுக்கள் 73 ஆக மொத்தம் 438 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதார–ருக்கு தீர்வு வழங்க வேண்டும்.

    மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். பொதுமக்களின் குறை தீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கும் துறை ரீதியாக மேஜைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை மூலம் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணன், தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விரைந்து வழங்க வேண்டும். ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனை செய்ய அலைக்கழிக்கக்கூடாது என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
    • இதனால் கோரிக்கை மனுக்களையும் பெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார். அப்போது அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ், ரெயில் பாஸ் வழங்குவதில் தாமதம் செய்யக்கூடாது. விரைந்து வழங்க வேண்டும். ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனை செய்ய அலைக்கழிக்கக்கூடாது என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமுக்கு வரும்போது, மற்ற தகவல்களை அவர்கள் பெறும் வகையில் தகவல் மையத்தை அமைத்தால் விண்ணப்பிக்கும் முறை, மனு எழுதுவது, மற்ற துறைகளுக்கு செல்வது போன்ற விவரங்களை கேட்டு அறிய முடியும். அதுபோல் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களையும் இந்த முகாமில் பெற்றுக்கொண்டால் அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு அலைய வேண்டிய நிலை இருக்காது. இதனால் கோரிக்கை மனுக்களையும் பெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    • கலெக்டர், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
    • ஒரு சில விவசாயிகள் நீண்டநேரம் பேச அனுமதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு விவசாயிகள் கலந்துகொண்டு, தங்கள் பிரச்சினைகளை மாவட்ட கலெக்டர் முன்பு எடுத்துக் கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் மோகன், உடனடியாக நடவடிக்கை எடுக்க அந்தந்தத் துறை ரீதியான அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், ஒரு சில விவசாயிகள் நீண்டநேரம் பேச அனுமதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும், இந்த கூட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை, ஆலை நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் 118 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
    • கூட்டத்தில் கலெக்டர் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 118 மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனங்கள் துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்காற்றியவர் களுக்காக பசுமை முதன்மையாளர் விருது என்ற விருதை நிறுவி வழங்கி வருகிறது. இதன்படி மாநிலத்தில் 100 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையாகவும் வழங்கப்படுகிறது.

    இதில் நீலகிரி மாவட்ட த்துக்கு 2 விருதுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுகுறித்த விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த தனி நபர்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு நலச்சங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழி ற்சாலைகள் ஆகி யோரிடம் இருந்து பெறப்பட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றில் கிளீன் குன்னூர் மற்றும் பகல்கோடு மந்து சூழல் மேம்பாடு குழு ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 2021-ம் ஆண்டு பசுமை முதன்மையாளர் 2021 விருதிற்கு உரியவையாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

    கிளீன் குன்னூர் நிறுவனத்துக்கான பசுமை சாதனையாளர் விருது சென்னையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விருது பெற்ற மற்றொரு நிறுவனமான பகல்கோடு மந்து சூழல் மேம்பாட்டு குழுக்கான விருதினை அக்குழுவின் தலைவர் மணிகண்டனுக்கு நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினார்.

    மக்கள் குறைதீர்க்கும் நாள கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும், உரிய காரணம் இல்லாமல் மனுக்களை நிராகரிக்க கூடாது எனவும், பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×